பெரியவர் சொல் கேளுங்கள்
ADDED :874 days ago
திருச்செங்கோட்டிலிருந்து மாம்பழக்கூடைகளுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றான் ஒரு இளைஞன். சாலையோர டீக்கடையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் கொக்கராயன்பேட்டைக்கு போக எவ்வளவு மணி நேரமாகும் எனக் கேட்டான். அதற்கு அவரோ, மெதுவாக போனால் 1 மணிநேரமும், வேகமாக போனால் 2 மணி நேரமும் ஆகும் என்றார். அதைக்கேட்ட அவன் வந்த வேகத்தில் புறப்பட்டான். குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பயணிக்க அவன் பழக்கூடைகளுடன் கீழே விழுந்தான். பழங்களை எல்லாம் எடுத்து ஒன்றாக்கி மீண்டும் புறப்பட்ட பெரியவர் சொன்ன நேரம் சரியாக இருந்தது. இப்படித்தான் பெரியவர்களின் அறிவுரைகளை கேட்காமல் பலர் இருக்கிறார்கள். பெரியவர் சொல்லும் அறிவுரையை கேளுங்கள்.