வேண்டாமே தாமதம்
ADDED :937 days ago
நண்பர்களான டேவிட்,டேனியல் இருவருக்கும் ஏற்பட்ட இடப்பிரச்னையால் டேவிட் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பி இருந்தார். அதற்கு பதில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார் டேனியல். அவரது உறவினர் ஒருவர் வக்கீலாக இருப்பது ஞாபகத்திற்கு வர, அவரிடம் சென்றால் தீர்வு கிடைக்கும் என நினைத்தார். அவரோ,‘‘சகோதரரே நேற்று வந்திருந்தால் உனக்காக வாதாடி இருப்பேன். இன்று முதல் நான் நீதிபதியாக பதவியேற்றுள்ளேன். உனக்கு என்னால் உதவமுடியாது என்றார். ‘உங்களுக்கான செயல்களை தெளிவாக செய்ய தாமதப்படாமல் முன்னேறுங்கள்’ என்கிறது பைபிள்.