உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாப்பம்மாள் புரம் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

பாப்பம்மாள் புரம் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் வைகை அணையில் இருந்து திருமஞ்சன கூட்டம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பொங்கவிட்டு, முளைப்பாரி, மாவிளக்கு, காவடி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 3ம் நாளில் பக்தர்கள் பால்குடம் சுமந்து ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக பகவதி அம்மன் கோயிலை அடைந்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !