கண்ணீர் விட்ட கடைசித்தம்பி
ADDED :872 days ago
சகோதரர்களான கவுரவர்களுடன் போர் புரிய பாண்டவர்களுக்கு விருப்பமில்லை. போரை தவிர்க்க தங்களுக்குள் ஆலோசித்தனர். ‘‘கிருஷ்ணரால் தான் பாரதப்போர் மூள்கிறது. அவரைக் கட்டுப்படுத்தினால் போர் நின்று விடும்’’ என்றான் கடைசித்தம்பி சகாதேவன். ‘‘அவதார புருஷனான என்னைத் தடுக்க உன்னால் முடியுமா?’’ எனக் கேட்டார் கிருஷ்ணர்.காலில் விழுந்த அவன், ‘‘கிருஷ்ணா! உன் திருவடியை சரணடைந்தவரின் கோரிக்கையை நீ புறக்கணிப்பதில்லை’’ எனக் கண்ணீர் சிந்தினான். நெகிழ்ந்த கிருஷ்ணரும் அவனது பக்திக்கு கட்டுப்பட்டார். பின் போருக்கான அவசியத்தை எடுத்துச் சொல்லி சகாதேவனைச் சம்மதிக்க வைத்தார்.