வைகாசி முதல் சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ADDED :1188 days ago
கோவை ; கோவை, ராம் நகர் கோதண்டராமசாமி கோவிலில் வைகாசி மாத பிறப்பு மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.