உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாக்கம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்

சிறுபாக்கம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.

சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பாரத நிகழ்ச்சி, முத்துமாரியம்மன், முத்தையா, பூமாலை, வேலடி கருப்பு சுவாமிகள்‌ வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, சுவாமி தேர் ஊர்வலம் நடந்தது. பின்னர், இரவு 7:00 மணியளவில் தீமிதி நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப்புற கிராம பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !