பரமக்குடி அம்மன் கோயில் நிலம் சர்வே பணி
ADDED :906 days ago
பரமக்குடி: பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் அருள்பாலிக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் நிலம் சர்வே பணி நடந்தது.
இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் சுமார் 27.54 ஏக்கர் மதுரை ராமேஸ்வரம் ரோட்டோரம் உள்ளது. அங்கு தனி வட்டாட்சியர் சுகுமாரன், உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி செயற்பொறியாளர் சங்கிலி ஆகியோர் முன்னிலையில் 160 நில அளவை கற்கள் நடப்பட்டன. மேலும் கோயில் நிர்வாகிகளுடன் இணைந்து சர்வே எண் 501/7, 287/1 ல் 14 நில அளவை கற்கள் நடப்பட்டது. தொடர்ந்து மற்ற நிலங்களுக்குரிய கற்கள் நடும் பணிகள் நடந்து வருகிறது.