முத்தாரம்மன் கோயில் கொடைவிழா; பச்சைசாத்தி அம்மன் வீதி உலா
ADDED :898 days ago
துாத்துக்குடி: துாத்துக்குடியில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நடந்து வருகிறது. நேற்று காலையில் இருந்து விசேஷ பூஜைகள் நடந்தது. மாலையில் அம்மன் பச்சை சாத்தி ரதவீதிகளில் மேள தாளத்துடன் உலா வந்தது. பச்சைசாத்தி விழா கமிட்டி தலைவர் சோமநாதன், செயலாளர் அனல் சக்திவேல், பொருளாளர் திருச்சிற்றம்பலம், சாமியாடி பழனி, ஆசிரியர் நடராஜன், டைகர் சிவா, பழனிகுமார், மாரிமுத்து, டேபிள் மணி, கணேசன், சேது மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்த முத்தாரம்மன் இரவில் கோயிலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.