/
கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் எல்லை கட்டுதல் உற்சவம் : தீப்பந்தம் ஏந்தி வலம் வந்த பக்தர்கள்
பாடலீஸ்வரர் கோவிலில் எல்லை கட்டுதல் உற்சவம் : தீப்பந்தம் ஏந்தி வலம் வந்த பக்தர்கள்
ADDED :1026 days ago
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு எல்லை கட்டுதல் உற்சவம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவை தேரடியில் வண்ணார மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், துர்தேவதைகளை விரட்டும் விதமாக பலியிட்டு எல்லை கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி ராஜ வீதி வழியாக வலம் வந்தனர். தினமும் பூஜைகள் நடக்கிறது. வரும் 25ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. இன்று (மே19) இரவு 11 மணிக்கு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடக்கிறது. ஜூன்5ம் தேதி வரை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.