சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு; ரூ.23.74 லட்சம் வசூல்
ADDED :905 days ago
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயில்களில் உண்டியல் திறப்பு நடந்தது. அறங்காவலர் ராஜா பெரியசாமி, திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி ஆகியோர் முன்னிலையில், கடந்த இரு நாட்களாக உண்டியல் காணிக்கை என்னும் பணி நடந்தது. இதில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் ரூ.23 லட்சத்து 74 ஆயிரத்து 235ம், சந்தன மகாலிங்கம் கோவிலில் ரூ. 3 லட்சத்து 59 ஆயிரத்து 315ம் காணிக்கையாக இருந்தது. பின்னர் காணிக்கை பணங்கள் அனைத்தும் மூடையாக கட்டப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் பணியாளர்கள் மூலம் மலையடிவாரம் கொண்டுவரப்பட்டது.