அவருடைய சித்தம் எதுவோ
ADDED :928 days ago
மாற்றுத்திறனாளிகள் (காது கேட்காது, வாய் பேச முடியாதவர்கள்) படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்றார் கல்வி அதிகாரி. நாத்திகரான அவருக்கு மாணவர்களின் செயல்பாடு பிடிக்கவில்லை.
கரும்பலகையில் அந்த அதிகாரி, ‘‘என்னை பேசும் படியாகவும் கேட்கும்படியாகவும் படைத்த ஆண்டவர் ஏன் உங்களை திறனற்று படைத்துள்ளார்’’ என எழுதினார்.
அப்படி செய்தது அவருக்கு சித்தமானது என பதில் எழுதினான் ஒரு மாணவன். நிதானத்திற்கு வந்த அதிகாரி ஆழமான தத்துவத்தை எளிதில் புரிய வைத்து விட்டான் என நன்றி சொன்னார்.