சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் நிகும்பலா யாகம்
ADDED :884 days ago
சின்னாளபட்டி: அமாவாசையை முன்னிட்டு சின்னாளபட்டி உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது. முன்னதாக மூலவர் அண்ணாமலையாருக்கு, திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் யாக குண்டத்தில், அரச மரம், கருங்காலி, தேக்கு சமித்துகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மிளகாய், எலுமிச்சை, மாதுளை பழம், வில்வம், திராட்சை, தேன் ஆகியவற்றுடன் ஹோமம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிர்வாக கமிட்டி தலைவர் நம்பிராஜன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.