உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். இன்று கூட்டம் அதிகளவில் இருந்தது. கொளுத்தும்  வெயிலை பொருட்படுத்தாமல் கோவில் மூன்றாம் பிரகாரத்தில,  தரிசன வரிசையில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து பக்தர்கள் காத்துக்கொள்ள, கோவில் வளாகத்தில் மேட் (தரைவிரிப்பு) போடப்பட்டு அதன் மீது தண்ணீரை பீச்சி அடிக்கும் பணியை கோவில் ஊழியர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !