மனதறிந்து பாவம் செய்து விட்டு, பரிகாரம் செய்தால் சரியாகுமா?
ADDED :980 days ago
மனதறிந்து செய்த பின், பரிகாரம் எப்படி பலன் அளிக்கும்? அந்த பாவம் இன்று வேண்டுமானால், யாருக்கும் தெரியாமல் போகலாம். ஆனால், காலம் என்னும் அரிய சக்தி, ஒருவனைக் கையில் எடுத்தபின், அதற்குரிய பலனை கொடுத்தே தீரும். இதைத் தான், ‘காலம் ஒருநாள் பதில் சொல்லும்’ ‘அவனவன் செய்த வினையை அவனே அறுக்கும் நாள் வரும்’ என்பார்கள். இளங்கோவடிகள் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். கோவலன் வழக்கை சரியாக விசாரிக்காமல் மன்னன் கொன்றான். கடைசியில் அவன் உயிரே போனது.