கவுண்டம்பாளையம் கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1135 days ago
கோவை ; கவுண்டம்பாளையம், கிரி நகர் 1வது வீதியில் உள்ள கருமாரியம்மன் சக்தி பீடம் மற்றும் மாசாணி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கருமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.