கடவுளைக் கனவில் கண்டால் நாம் கேட்கும் வரம் என்னவாக இருக்க வேண்டும்?
ADDED :898 days ago
அநியாயக்காரர்களை, அக்கிரமக் காரர்களை, மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்களை, கொடியவர்களை அழிப்பதற்கு அனைத்து ஆயுதங்களுடனும் வா. எங்கள் தேசம் மீண்டும் ஆன்மிகப்பாதைக்குள் செல்ல வேண்டும். மீண்டும் ராமராஜ்யம் மலர வேண்டும் என கேளுங்கள். கனவில் என்ன! தினமும் சுவாமியை வணங்கும் போது, இதை எல்லாருமே கேளுங்கள். நமது கூட்டுப்பிரார்த்தனை இறைவனின் காதுகளை நிச்சயம் எட்டும்.