உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க கருட வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள்

தங்க கருட வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார். மே 24 கொடியேற்றத்துடன் துவங்கிய வைகாசி பிரம்மோற்சவ விழாவில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் வலம் வருகிறார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தங்க கருட வாகனத்தில் பெருமாள் வைகுண்ட நாதனாக செங்கோல் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உடன் அருள் பாலித்தார். நேற்று அனுமன் வாகனத்திலும், இன்று யானை வாகனத்திலும் அருள் பாலிக்கிறார். மேலும் நாளை காலை 11:00 மணிக்கு மேல் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !