உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருடசேவை

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருடசேவை

புதுச்சேரி, : புதுச்சேரி காந்திவீதி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி கருட சேவையில் அருள் பாலித்தார்.புதுச்சேரி, காந்திவீதி வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி காந்திவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 37ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி திருமஞ்சன நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 26ம் தேதி ஹம்ச வாகனத்திலும், 27ம் தங்க சிம்ம வாகனத்திலும், 28ம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 29ம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று இரவு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !