உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மதுர காளியம்மன் கோவில் திருவிழா

நத்தம் மதுர காளியம்மன் கோவில் திருவிழா

நத்தம்; நத்தம் கர்ணம் தெரு செல்வ விநாயகர், மதுர காளியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி கடந்த மே 26 கணபதி ஹோமம், கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. மே 30 மாலை முனியாண்டி சாமிக்கு பழம் வைத்தல், இரவு அம்மன் குளத்திலிருந்து சக்தி கரகம் பாவித்து மேளதாளம் மற்றும் அதிர்வெட்டுகள் முழங்க கரகம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. நேற்று பால்குடம், அக்கினி சட்டி, அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். இன்று மதியம் அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், இரவு சக்தி கரகம் அம்மன் குளம் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. நாளை அம்மன் சயனக் கோலத்தில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !