வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி திருக்கல்யாணம்; பக்தர்கள் பரவசம்
ADDED :959 days ago
வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவமும், விடையாற்றி பெருவிழாவும் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழா, இம்மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 3ம் தேதி வரை வைகாசி விசாகப் பெருவிழாவும், ஜூன் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை, விடையாற்றி திருவிழாவும் நடைபெற உள்ளன. திருவிழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டத்தை தொடர்ந்து, நேற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் முழுங்க சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடும் நடைபெற உள்ளது.