பெரம்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா விமரிசை
ADDED :822 days ago
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பெரம்பூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 26ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு நாளும், அர்ச்சுனன் தபசு, மாடு பிடி சண்டை, தருமர் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி தீமிதித்தனர். இதைத் தொடர்ந்து, உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.