உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணாபுத்தில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணாபுத்தில் கும்பாபிஷேகம்

சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே எட்டுமூலைப்பட்டி கிருஷ்ணாபுத்தில் உள்ள சடையாண்டி, கன்னிமார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் ஹரிஹரசந்தோஷ் தலைமையில் மூன்று கால யாக பூஜைகள் செய்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து சடையாண்டி சுவாமி நடுகல்லிற்க்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். சுவாமி அலங்காரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இவ்விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், ஊராட்சி தலைவர் ஜென்சி ராணி உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கிராமத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பூஜாரி பெரியகருப்பன், கிராம சேர்வைக்காரர் தவமணி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !