உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல்: ஆனி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவார சீனிவாசப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடந்தது.திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. நேற்று விஸ்வக்சேனர் திருமண் காண்டல் நகர் சோதனை செய்தல், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் , செயல் அலுவலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !