வீரக்குடி கரைமேல் முருகன் கோவில் வருஷாபிஷேகம்
ADDED :838 days ago
நரிக்குடி: நரிக்குடி வீரக்குடியில் பிரசித்தி பெற்ற கரைமேல் முருகன் கோயில் உள்ளது. 2014ல் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் இன்று நடந்த வருஷாபிஷேகத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யாகங்கள் நடந்தன. சங்காபிஷேகமும், 108 கலச அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.