ராமேஸ்வரத்தில் உலகின் உயரமான நடராஜர் சிலைக்கு திருப்பணி துவக்கம்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உலகில் மிக உயரமான 51 அடி ஐம்பொன் நடராஜர் சிலை அமைக்கும்திருப்பணிகள் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
உலக சிவ ஆன்மிக அடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில், நேற்று ராமேஸ்வரம் ஓலைகுடா கடற்கரை அருகில் 51 அடி உயரத்தில் ஐம்பொன்னில் நடராஜர் சிலை அமைக்க திருப்பணி துவக்க பூஜை நடந்தது. முன்னதாக மாதிரி நடராஜர் சிலைக்கு தீபாராதனை நடந்தது. சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் மற்றும் சங்கோலி முழங்கப்பட்டது. ஐம்பொன் நடராஜர் சிலை அமைக்கும் திருப்பணியை ஓர் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், உலக சிவ ஆன்மீக அடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள், ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளீதரன், மாவட்ட பொதுச் செயலாளர் நாகேந்திரன், ராமேஸ்வரம் நகர தலைவர் ஸ்ரீதர், செயற்குழு உறுப்பினர் ராமு பங்கேற்றனர்.