உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சுந்தராபுரம்: சுந்தராபுரம் அடுத்து எல். ஐ. சி, காலனி பின்புறம், எம்.ஜி.ஆர்., நகரிலுள்ள சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை, விஸ்வக்சேன ஆராதனம், மஹா சங்கல்பம் உள்ளிட்டவையுடன் துவங்கின. மாலை ரஜித பந்தனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், திவ்யபிரபந்த பாராயணம், தீர்த்தம், பிரசாதம் வினியோகம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து நேற்று காலை திவ்ய பிரபந்த பாராயணம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம் ,கடங்கள் புறப்பாடு, மஹா ஸம்ப்ரோஷணம் நடந்தன. இதையடுத்து, 11:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கும். பரிவாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் தளிகை அம்சை, சாற்றுமறை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் நடந்தன. திரளானோர் பங்கேற்று, வேங்கடேஸ்வரரை தரிசித்து சென்றனர். இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !