ஆனி வெள்ளி: புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :1085 days ago
கோவை: சுந்தராபுரம் காமராஜ் நகர் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் பச்சை நிற புடவை உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.