ஆனி பௌர்ணமி, குரு பூர்ணிமா: ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ADDED :1202 days ago
கோவை : ராம் நகர் வி.என் .தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆனி பௌர்ணமி தினம், குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோயிலில் உள்ள ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.