உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ருத்ராபிஷேகம்

வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ருத்ராபிஷேகம்

வாரணாசி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று அதிகாலை வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திரில் ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் சென்ற சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை நடத்தி வந்தார். தொடர்ந்து இன்று அதிகாலை வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாத் மந்திரில் ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை செய்தார். இன்று ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை, காசியில் , ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளையில் தங்கி, அருளாசி வழங்குகிறார். விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக கருதப்படும், சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !