ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு புதிய நீச்சல் குளம்
ADDED :882 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் யானைக்கு புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமிக்கு, 3 ஆண்டுக்கு முன்பு கோயில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நீச்சல் குளம் அமைத்தனர். ஆனால் கோயிலில் இருந்து நீச்சல் குளம் செல்ல யானை ராமலட்சுமிக்கு சோர்வும், காலில் காயமும் ஏற்பட்டதால், நீச்சல் குளம் செல்வது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் கோயில் வடக்கு நந்தவனத்தில் நன்கொடையாளர்கள் மூலம் ரூ.6.50 லட்சத்தில் புதிய நீச்சல் குளம் அமைத்தனர். இதன் கட்டுமான பணி முழுமை பெற்ற நிலையில், குளத்தில் தண்ணீர் நிரப்பி இயற்கை சுழலில் யானை குளித்து விளையாட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.