ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு!
ADDED :4847 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு, திருப்பதி வெங்கடசாலபதி கோயிலில் இருந்து வந்த, பட்டு சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.திருப்பதி வெங்கடசாலபதி கோயில் புரட்டாசி பிரம்மோற்சவத்தில், கருடசேவையன்று சார்த்துவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சார்த்திய மாலை , பரிவட்டம், கிளி , ஸ்தானிகம் கிச்சப்பன் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர் சீராக, திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து, ஆண்டாளுக்கு சார்த்துவதற்காக, மஞ்சள் பட்டு புடவை ,குடைகள் கொண்டு வரப்பட்டன. அந்த பட்டு, நேற்று மாலை ஆண்டாளுக்கு சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.