உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மன் கோயிலில் பச்சை மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன்

வராகி அம்மன் கோயிலில் பச்சை மஞ்சள் அரைத்து பெண்கள் நேர்த்திக்கடன்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி உற்ஸவ பெருவிழா நடந்தது. கடந்த ஜூலை 12 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று காலை 7:00 மணியளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர். பகல் 11:00 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்ஸவர் வராகி அம்மனின் வீதி உலா புறப்பாடு நடந்தது. இரவு 9:00 மணியளவில் பூச்சொரிதல் விழா நடந்தது. ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பச்சை விரலி மஞ்சளை அம்மியில் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் கிரிதரன் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உத்தரகோசமங்கை முன்னாள் ஊராட்சித் தலைவர் உத்தண்ட வேலு குழுவினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !