உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் வீதி உலா

கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் வீதி உலா

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார். தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் அலங்காரமாகி கோலாகலத்துடன் வீதி உலா நடக்கிறது. இக்கோயிலில் ஜூலை 24 தொடங்கி கொடி ஏற்றத்துடன் விழா நடக்கிறது. மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக அனைத்து விழாக்களும் நடந்து வருகின்றன. நேற்று மாலை சுந்தரராஜ பெருமாள் பரமபத நாதனாக பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் இரவு 8:00 மணிக்கு திருவீதி உலா நடந்தது. இன்று ஹனுமன் வாகனத்தில் அருள் பாலிக்கிறார். நாளை இரவு 7:00 மணிக்கு யானை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !