உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை; சிறப்பு பூஜை

செல்வ விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை; சிறப்பு பூஜை

திண்டுக்கல் : திண்டுக்கல் சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது. திண்டுக்கல் சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை தீபாராதனையோடு விழா தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கணபதிஹோமம் நடந்தது. காலை 8:00 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை நடந்தது. அதேபோல மாலை 4:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை பூஜை நடந்தது. 7:00 மணி முதல் 7:30 மணி வரை தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்றும் காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை லட்சார்ச்சனை பூஜை நடந்தது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி நடந்ததோடு, தீபாராதனை காண்பித்து பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !