உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் சாமி தரிசனம் செய்ய பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் . அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் .இந்நிலையில் இன்று 31ம் தேதி காணிக்கை எண்ணப்பட்டது. கடந்த 16 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய பணம் 1,33,40,762 ரூபாய், தங்கம் :-152.கிராம், வெள்ளி :- 3 கிலோ 500.கிராம், வெளிநாட்டு பணம் அமெரிக்கா - 1,077.  டாலர்கள், இங்கிலாந்து - 2,040.பவுண்டுகள், மலேசியா - 23 ரிங்கிட்ஸ், சிங்கப்பூர் - 2. டாலர்கள், U.A.E - 25. திர்ஹாம்கள், யூரோ - 100. யூரோ வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீ மோகன் ரெட்டி மற்றும் தேவஸ்தான செயல் அலுவலர் வெங்கடேசு தெரிவித்தனர். இந்த உண்டியல் பணம் கணக்கிடும் பணியில் கோயில் துணை நிர்வாக அதிகாரிகள் எஸ்.வி.  கிருஷ்ணா ரெட்டி, ரவீந்திர பாபு, வித்யாசாகர் ரெட்டி, ஹரி மாதவ் ரெட்டி, மேற்பார்வையாளர்கள்  ரவி, ரங்கசாமி மேலும் தேவஸ்தான ஊழியர்கள், சேவகர்கள், யூனியன் வங்கி காணிப்பாக்கம் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !