திருச்சுழி பூமிநாதர் கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்; ரமண மகரிஷி பிறந்த இடத்தில் தியானம்
திருச்சுழி: திருச்சுழியில் பாஜ. தலைவர் அண்ணாமலை ரமண மகரிஷி பிறந்த இடத்தில் தியானம் செய்துவிட்டு, பின்னர் பூமிநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.
திருச்சிக்கு இன்று 12.30 க்கு வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை ரமணா மகரிஷி பிறந்த இடத்தை பார்வையிட்டார். அங்குள்ள தியான மண்டபத்தில் 5 நிமிடம் தியானம் செய்தார். ரமண மகரிஷி பற்றிய புத்தகங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது வருகையை பதிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பூமிநாதர் கோவிலுக்கு சென்று கோவிலை சுற்றி பார்த்துவிட்டு, பூமிநாதர், துணை மாலையம்மன் சாமிகளை தரிசனம் செய்தார். மோடி, அமித்ஷா, நட்டா பெயர்களில் சிறப்பு அர்ச்சனை செய்தார். கோயிலின் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். நானும் ஒரு விவசாயி தான். விவசாயிகளின் கஷ்டம் அனைத்தும் எனக்கு தெரியும். விவசாயிகளின் பிரச்சனை அறிந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. என்றார்.