உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் இடியால் ஏற்பட்ட தீ; சாரல் மழையால் அணைந்தது.. பக்தர்கள் நிம்மதி

சதுரகிரியில் இடியால் ஏற்பட்ட தீ; சாரல் மழையால் அணைந்தது.. பக்தர்கள் நிம்மதி

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் சாப்டூ பீட் 5 என்ற இடத்தில் நேற்று மாலை இடியால் ஏற்பட்ட தீ, சாரல் மழையால் அணைந்தது. சம்பவ இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை முதல் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் மலையேறிய நிலையில், மாலை 4:30 மணியளவில் பக்தர்கள் செல்லும் வழித்தடமான கோணத் தலவாசல் என்ற இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில், சாப்டூர் பீட் 5 என்ற மலைப்பகுதியில் பலத்த இடி விழுந்ததில் காய்ந்த செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்தது. அப்போது பெய்த சாரல் மழையால் தீ அணைந்து, புகை மூட்டம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தி வனப்பகுதி நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !