பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :840 days ago
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரிய நாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் கோவிலை வலம் வந்த பின்னர் வசந்த மண்டப ஊஞ்சலில் எழுந்தருளினார். அதன் பின்னர் பூசாரிகள், தாலாட்டு பாடல்களை பாடி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ ஆராதனைகளை நடத்தினர். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.