உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளங்கருப்பனசாமி கோவிலில் படையில் விழா; பக்தர்கள் தரிசனம்

இளங்கருப்பனசாமி கோவிலில் படையில் விழா; பக்தர்கள் தரிசனம்

நத்தம்; நத்தம் அருகே சேத்தூர் சொறிபாறைப்பட்டி இளங்கருப்பனசாமி கோவில் ஆடிப்படையல் விழா பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி இளங்கருப்பனசாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கிடாய்கள் வெட்டப்பட்டு அசைவ உணவு சமைக்கப்பட்டு அன்னதான விழா நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிறுகுடி தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !