உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவேதாந்த தேசிகர் திருநட்சத்திர உற்வசம்

ஸ்ரீவேதாந்த தேசிகர் திருநட்சத்திர உற்வசம்

தூத்துக்குடி: வைணவ ஆசார்யர்களில் ஒருவரான ஸ்ரீவேதாந்த தேசிகரின் திருநட்சத்திர உற்சவம் ஆழ்வார் திருநகரியில் கொண்டாடப்பட்டது. ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் கோயிலில் அவரது திருநட்சத்திர உற்சவம், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நியமனப்படி மூன்று நாட்கள் கொண்டாப்பட்டது. தினமும் விசேஷ திருமஞ்சனம், திருவாராதனம் செய்து சிறப்புத் தளிகைகளுடன் கோஷ்டி நடைபெற்றது. ஸ்சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாராயணம் நடந்தது. திருவோணத்தன்று காலை கோஷ்டி முடிந்ததும் தேசிகர், பெரிய கோயிலுக்கு நகர்வலமாக எழுந்தருளி, ஆதிநாதர், ஆழ்வார் மங்களாசாசனம் நடந்தது. தொடர்ந்து கூரத்தாழ்வான் கோயில்களிலும் மங்களாசாஸனம் முடிந்த பின் தேசிகர் கோயிலுக்குள் மீண்டும் எழுந்தருளினார். திருவாய்மொழிப்பிள்ளை, வாத்யார் ஸ்ரீனிவாஸ ஐயங்கார், முத்தப்பன், பிரபு, ரங்கன் சேது, பிரசன்ன, நரசிம்மன், திருவேங்கடத்தான் மற்றும் பலர் திருவாய்மொழிப்பாராயணத்தில் பங்குபெற்றனர். தேசிகர் கோயில் கைங்கர் யங்களை திருவேங்கடத்தான் பட்டர், ஸ்வாதி இருவரும் செய்தனர். திருநட்சத்திர உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரம டிரஸ்டி குங்குமம் ஸ்ரீனிவாஸ ஐயங்கார், மேலாளர் ஸ்ரீனிவாஸ தாத்தம் செய்திருந்தனர். மாலையில் ஆண்டவன் ஆசிர்மத்தில் தேசிக பிரபந்தம் பாராயணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !