அவிநாசி ஐயப்பன் கோவிலில் ஆண்டு விழா; கலசாபிஷேகம்
ADDED :835 days ago
அவிநாசி: அவிநாசி ஐயப்பன் கோவிலில்,ஒன்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது.
அவிநாசி ஐயப்பன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாஸ்தா ஹோமம் ஆகிய ஹோம பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி, அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா ஐயப்பன் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன், சண்முகம், வெள்ளியங்கிரி, ராஜ்குமார், சாமிநாதன், சிவாச்சாரியார் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.