பழநியில் ஆக.26ல் பிரம்மோற்சவம்
ADDED :785 days ago
பாலசமுத்திரம்: பழநி,பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ திருவிழா ஆக.26ல் துவங்க உள்ளது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா ஆக.26ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இத்திருவிழாவில் செப்.1ல் திருக்கல்யாணமும், செப்.3ல் திருத்தேரோட்டமும் நடைபெறும். செப்.4ல் கொடியிறக்குதல் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.5ல் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.