பார்த்தாலே பரவசம்
ADDED :1069 days ago
கடவுளை ஒளிவடிவில் வழிபடுவது ஞானிகளின் நிலை. ஆனால் மனிதர்களால் அப்படி வழிபட முடியாது என்பதால் தான் கிருஷ்ணராக அவதரித்தார் மகாவிஷ்ணு.
மதுசூதன சரஸ்வதி என்னும் அருளாளர் கிருஷ்ணர் மீது ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம் பாடினார் இதில், ‘‘ஞானிகள் மனதை அடக்கி தங்களுக்குள் ஜோதி வடிவில் கடவுளை தரிசிப்பர். அதற்காக மற்றவர்கள் தவம் செய்ய முடியவில்லையே என வருந்த தேவையில்லை. அந்த ஜோதியே நீலமேனியுடன் கார்மேக வண்ணனாக கிருஷ்ணராக யமுனா நதிக்கரையில் ஓடி விளையாடியது. அவரை பார்த்தாலே மனம் பரவசப்படும். வளமான வாழ்வும், மோட்சமும் கிடைக்கும்’’ என்கிறார்.