ஆசையே அலை போலே...
ADDED :1069 days ago
துன்பங்களுக்கு காரணம் ஆசையே என்கின்றனர் மகான்கள். கோடி கோடியாக பணம் சேர்த்த பிறகும் கூட மனிதனுக்கு ஆசை அடங்குவதில்லை. தேவையற்ற பொருளை பிறருக்கு கொடுக்க மனம் வருவதில்லை. இறுதி வரை பணத்தாசையுடன் திரிகிறான். சம்பாதித்த பணம் நம்முடன் வராது எனத் தெரிந்தே அலைகிறான்.
மனைவி, குழந்தைகளுக்காக உழைக்க வேண்டியது அவசியமே. அதில் சிறு பகுதியையாவது தானம் செய்ய வேண்டும். அவசியமானதை மட்டும் வாங்கி ‘போதும்’ என நிம்மதியுடன் வாழச் சொல்கிறார் நபிகள் நாயகம். “எதையும் போதும் என்று சொல்லாத உள்ளத்தை கைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்கிறார்.