சிவபுரிபட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா; வடுகபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1128 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.