திருநள்ளாறு கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ADDED :817 days ago
காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீதர்பாரண்யேஸ்வர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட திருநள்ளார் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் தனி சன்னதியில் சனிஸ்வரபகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீபைரவருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.