மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4711 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4711 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4711 days ago
அஷ்டலட்சுமி: நவரத்ன மாலை: நவராத்திரி நாட்களில் அஷ்டலட்சுமியரும் மகாலட்சுமியுடன் இணைந்து நவ வடிவினராக தரிசனம் அளிப்பதாக ஓர் ஐதிகம் உண்டு. அந்த சமயத்தில் லட்சுமி தேவியை நவரத்னமாலை பாடித் துதிப்பது மங்களங்கள் யாவும் தரும். நவராத்திரி நாட்களில் நீங்கள் சொல்லி வழிபட எளிதான நவரத்னமாலை துதி ஒன்று இதோ...! ஆதி லட்சுமி வெண்மஞ்சள் பட்டுடுத்தி, வெண்தாமரை ஆசனமாய்வேண்டிய வரமருள வீற்றிருக்கும் ஸ்ரீதேவி!பண்மலர் மாலையிலே பரிவுடனே மகிழ்ந்துபலநலன்கள் நல்கிடப் பார்க்கும் விழியழகி!தேனிருக்கும் மலரினை வண்டு தினம் தேடுதல்போல்அருள் சுரக்கும் உனையே தினம் நாடி நான் வந்தேன்மாணிக்க ஒளியே! ஒளிரும் பேரருள் மழையே!மன்னு புகழ் நீ தருவாய் ஆதிலக்ஷ்மியே வணங்குகிறேன்! சந்தான லட்சுமி குழலினில் நறுமலர் குறுக்கினில் வெண்பட்டாடைஇதழோரம் குறுநகை இமையோரம் அருட்பார்வைஅழகிய மழலையைத் திருக்கரத்தால் பற்றிமூவுலகின் தாயாக வீற்றிருக்கும் கொற்றவனே!மழலைகள் இரண்டு என் மடியினில் தவழமறுக்காது நீயும் மங்கல வரமளிப்பாய்பூமகளே... பொன்மகளே பூவில் உறை திருமகளேபுஷ்பராகமே.. சந்தானலக்ஷ்மியே... வணங்குகிறேன்!! கஜ லட்சுமி பொற்கலசம் ஏந்திப் பூரித்த ஐராவதங்கள்பொன்மகளே.. உனக்கு இருபுறமும் வீற்றிருக்க,நறுமணம் தாங்கும் கமல மலர் இரண்டினைமலர் மகளே உனது மலர்க்கரம் பற்றியிருக்கதிருவேங்கடன்தன் தங்கத் திருமார்பில்திருமகளே நீ மகிழ்வுடன் கொலுவிருக்கவைடூர்ய ஒளியே! வற்றாத அருட்சுடரேவயிரமனம் அருள்வாய் கஜலக்ஷ்மியே... வணங்குகிறேன்!! தன லட்சுமி அமுதகலசம் தனை வலக்கரம் தாங்கிகுமுத மலரிரண்டை இருகரமும் தாங்கிபொன் ஆபரணங்கள் அங்கமெலாம் தாங்கிவஸ்திராபரணம் இடையினில் தாங்கிபொற்றாமரையில் வீற்றிருக்கும் தேவியேபொன் முதலாம் சீர்தனங்கள் என்வாழ்வில்கோடிகோடியாய் குவிய வரமருள்வாய்கோமேதகமே! தனலக்ஷ்மியே... வணங்குகிறேன்!! தான்ய லட்சுமி ஆற்றோரதென்னை வாழைகம்பு கேழ்வரகுபாக்கு மரமும் பாங்குடனே செழித்திருக்கமுற்றமெலாம் முத்துக்கள் எனும்படியாய்முத்தான நவதான்யம் பல்கிப் பெருகிவரகுற்றமொன்றில்லாத உளங்களை நாடித்தேடிகொற்ற வாழ்வு தனைக் குறையாமல் அருளவீற்றிருக்கும் வடிவழகே! வேண்டும் வளம் பொழிபவளேமுத்தே! முத்தொளியே! தான்யலக்ஷ்மியே! வணங்குகிறேன்!! வீர லட்சுமி எண் கரங்களில் இலங்கிடும் வீர ஆயுதங்கள்பண் மலர்களில் இளகிடும் நின் பொன்மனம்சிம்ம வாகனத்தில் புறப்பட்டாய் பவனிவரபக்தர் உளங்களில் புகுந்திட்டாய் வீரம் தரவெற்றி மாலை அணிந்தவளே வெற்றி பல அருள்பவளேபோற்றி மாலை புனைந்திட்டேன் தேற்றி எனக்கே அருள்வாய்கொற்ற வாழ்வு தனை பெற்றவளே தந்தருள்வாய்நற்பவளக் கொடியே! வீரலக்ஷ்மியே! வணங்குகிறேன். விஜய லட்சுமி அன்னம் அருகிருக்க அருளே வடிவெடுத்திருக்கஅங்கம் தங்கமாய் மின்ன அபயம் வலக்கரத்திருக்கஎண்கரங்களோடு கிரீட குண்டலம் மின்ன,விண்ணுலகும் மண்ணுலகும் ஏத்தி ஏத்தித் தொழ,அபயம் அபயம் எனப் பணிந்து தொழுவோர்க்குஜெயம் ஜெயம் என அனைத்திலும் ஜெயிக்க வைப்பாய்நீள் ஆயுள் நிறைசெல்வம் நிகரற்ற நற்குணமருளநீல மணிச்சுடரே... விஜயலக்ஷ்மியே! வணங்குகிறேன். வித்யா லட்சுமி பொற்கரத்தில் புத்தகம் எழுதுகோலுடன்பூவினில் அமர்ந்து புவியெலாம் ஞானம் அருளகற்போர் உளம் தனில் கலையாத கல்விதரகமல மலர் ஆசனத்தில் களிப்புடனே அமர்ந்துபாருலகில் பெருமைபெற ஆயகலைகள் மொத்தம்அறுபத்து நான்கும் அடியேனுக்கு அருளபேறுகள் பதினாறும் குறையாமல் பெறவேண்டிமரகத ரத்தினமே வித்யாலக்ஷ்மியே! வணங்குகிறேன். மகா லட்சுமி ஆயுள் ஆரோக்ய ஐஸ்வர்யங்கள் வேண்டிஆதி, சந்தான, கஜ, தன தான்ய லக்ஷ்மிவீர விஜய வித்யா லக்ஷ்மி எனஅஷ்ட லக்ஷ்மிகளை இஷ்டமுடன் பணிந்திட்டேன்.கஷ்ட வாழ்வுதனைக் களைந்தகற்றிஇஷ்ட சுகங்களை எளிதில் பெற வைப்பாய்வையகத்தில் வாழ்வாங்கு வாழ வகை செயவைரமணிச் சுடரே! மஹாலக்ஷ்மியே வணங்குகிறேன்.
4711 days ago
4711 days ago
4711 days ago