உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகருக்கு பூஜை செய்து வணங்கிய யானைகள்

விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகருக்கு பூஜை செய்து வணங்கிய யானைகள்

கூடலூர்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா மாலை சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில், பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானை கிருனா மணி அடித்தபடி கோயிலை வளம் வந்து பூஜை செய்து விநாயகரை வணங்கியது. இந்நிகழ்வு, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து வளர்ப்பு யானைளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன். பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, ஆஸ்கார் விருது பெற்ற ஆவண படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளி, வனச்சரகர்கள். வன ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !