மலைக்கோவிலில் சனி பிரதோஷம்
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், சனி மஹா பிரதோஷ வழிபாடு இன்று (அக்.,13) நடக்கிறது.காரிமங்கலம், அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸவரர் கோவிலில், சனி மஹா பிரதோஷத்தையொட்டி, இன்று (அக்.,13) மாலை, 4 மணிக்கு, கணபதி ஹோமமும், நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிசேஷகம், அலங்கார, பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வர மடம் வேத நாயக சமேத பெண்ணேஸ்வர் கோவிலில், இன்று மாலை, 4 மணிக்கு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர். தர்மபுரி, கோட்டை காமாட்சி சமேத மல்லிகார்சுனேஸ்வர் கோவில், நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதீஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில் உள்ளிட்ட, மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், இன்று (அக்.,13) சனி மஹா பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடக்கிறது.