உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

விக்கிரமசிங்கபுரம் அய்யனார்குளத்தில் பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த17ம் தேதி இரவு 8 மணிக்கு அய்யாபதியிலிருந்து
கொடி அழைப்பு நடந்தது. 18ம் தேதி காலை சிறப்பு பூஜையும் இரவு 7 மணிக்கு அன்னதானம், தொடர்ந்து சிவச்சந்திரன் அய்யாவழி ஆன்மிக வழிபாடு, 19ம் தேதி காலை 11 மணிக்கு காலன் பூஜை, மதியம் 1 மணிக்கு பூக்குழியில் அக்கினி ஏற்றுதல் நடந்தது. இரவு 09:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நள்ளிரவு 12 மணிக்கு சாம பூஜை நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை, படைப்பு எடுத்தல் நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு அன்னதர்மம் நடந்தது. கடந்த17ம் தேதி முதல்20ம் தேதி வரைஅய்யாநாக வாகனத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !